الرئيسية تعرف على الإسلام الشرك الأصغر (تاميلي)

الشرك الأصغر (تاميلي)

Read Article
عرض المحتوى باللغة الأصلية

الشرك الأصغر (تاميلي)

اللغة: تاميلي
إعداد: முஹம்மத் இம்தியாஸ்
نبذة مختصرة:
مقالة باللغة التاميلية تبين الشرك الأصغر وهو الرياء والعمل لأجل الناس وانتظار الثناء منهم على العمل .

الوصف المفصل

    சிறிய இணைவைப்பு

    ] Tamil – தமிழ் –[ تاميلي

    M.S.M.இம்தியாஸ் யூசுப்

    2014 - 1435

    الشرك الأصغر

    « باللغة التاميلية »

    محمد إمتياز يوسف

    2014 - 1435

    சிறிய இணைவைப்பு

    இது பெரிய இணைவைப்பைப் போன்று நிரந்தர நரகத்தை தரக்கூடிய பாவமல்ல. என்றாலும் இப்பாவத்தை செய்பவர் அல்லாஹ் வின் மன்னிப்பை பெறவோ தண்டணை பெறவோ கூடியவராக இருப்பார்.

    ஒரு வணக்கத்தை செய்யும் போது அதன் மூலம் அல்லாஹ் வின் திருப்தியையும் அவனது கூலியையும் அவனிடம் மாத்திரம் எதிர்பார்க்க வேண்டும். கலப்படமற்ற தூய எண்ணத்துடன் அல்லாஹ்வுக்காக மட்டும் காரிய மாற்ற வேண்டும். இதனை விடுத்து மனிதர்களின் பாராட்டுக் களையும் மதிப்பையும் பெறுவதற்கு காரியமாற்றும் போது அது பாமாகிவிடுகிறது. இதனையே சிறிய இணைவைத் தல் என கூறப்படும்.

    மனிதர்களின் முகஸ்துதிக்காக உலகியல் புகழுக்காக காரியமாற்றும் போது அந்த புகழை இந்த உலகில் கொடுத்து அவனை அல்லாஹ் பிரபல்யப்படுத்து விடு கிறான். நாளா பக்கமும் இவனுக்குரிய அந்த புகழை மேலாங்கச் செய்வான். இவனது எண்ணம் புகழை தேடு வதாக இருந்ததனால் - அல்லாஹ்வுக்கென்ற உளத்தூய்மை இல்லாமல் இருந்ததனால் - அந்த புகழுக்குரிய கூலி இந்த உலகில் கிடைத்து விடுகிறது. மரணத்திற்கு பின் உள்ள மறுமை உலகிலோ எந்த நன்மையும் கூலியும் இல்லாதவனாகி தண்டனைக்குரியவனாகி விடுகிறான்.

    தொழுவது, நோன்பு, நோற்பது உட்பட எந்தவொரு அமலாக இருந்தாலும் மிகச் சிறிய அற்பமான அமலாக இருந்தாலும் மக்களின் மதிப்புக்காக செய்யக் கூடாது. மற்றவர்கள் பாரக்கின்றார்கள் என்பதற்காக வழமைக்கு மாற்றமாக அதிகமாக வணக்கம் செலுத்தக் கூடாது. மக்களின் புகழை அஞ்சியே செயற்பட வேண்டும்.

    صحيح البخاري (8ஃ 104)

    عَنْ سَلَمَةَ، قَالَ: سَمِعْتُ جُنْدَبًا، يَقُولُ: - قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَمْ أَسْمَعْ أَحَدًا يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرَهُ، فَدَنَوْتُ مِنْهُ، فَسَمِعْتُهُ يَقُولُ: - قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ وَمَنْ يُرَائِي يُرَائِي اللَّهُ بِهِ

    நான் நபி(ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிற வரை அல்லாஹ் விளம்பரப்படுத்துவான். முகஸ்துதிக் காக நற்செயல் புரிகிறவரை அல்லாஹ் அம்பலப்படுத்துவான் என்று கூறியதைக் கேட்டேன்.

    அறிவிப்பவர்: ஜூன்துப்(ரலி) நூல்: புகாரி.

    صحيح مسلم (3ஃ 1513)

    عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ: أَيُّهَا الشَّيْخُ، حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ' إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ، وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ، وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ، وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ، ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ

    மறுமை நாளில் தீர்ப்பு செய்யப்படுபவரில் முதன்மை யானவர் உயிர் தியாகம் செய்த வராவார். அவர் கொண்டு வரப்பட்டு நிறுத்தப் படுவார். அவருக்கு அல்லாஹ் கொடுத்த அருட்கொடைகளை அறியச் செய்வான். அவரும் அதனை அறிந்து கொள்வார். இந்த அருட் கொடைகள் மூலம் நீ என்ன செய்தாய் என்று கேட்பான். நான் மரணிக்கும் வரை உன் வழியில் போராடினேன் என்று கூறுவார். (இல்லை) நீ பொய் சொல்கிறாய். நீ ஒரு வீரன் என்று புகழப்படவேண்டும் என்று நீ போரிட்டாய். அவ்வாறே கூறவும் பட்டது என்று கூறுவான். பிறகு இவனை நரகில் முகம் குப்பர தூக்கி எறியுங்கள் என்று சொல்லப்படும் அவ்வாறே அவர் எறியப்படுவார்.

    இரண்டாமவர் அவர் கல்வியை கற்று பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். குர்ஆனை ஓதியும் வந்தவர். அவருக்கு அல்லாஹ் புரிந்த அருட் கொடைகள் பற்றி அறியச் செய்வான். அவரும் அதனை அறிந்து கொள்வார். இந்த அருட் கொடைகள் மூலம் நீ என்ன செய்தாய் என்று கேட்பான். (யாஅல்லாஹ்) கல்வியை கற்று பிறருக்கும் அதனை கற்றுக் கொடுத்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன் என்று கூறுவார். (இல்லை) நீ பொய் சொல்கிறாய். நீ ஒரு அறிஞன் என்று புகழப்பட வேண்டும் என்ப தற்காக குர்ஆனை ஓதினாய். அது உனக்கு கூறப்பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவனை நரகில் முகம் குப்பர தூக்கி எறியுங்கள் என்று சொல்லப்படும் அவ்வாறே அவர் எறியப்படுவார்.

    மூன்றாமவர். அவருக்கு அல்லாஹ் பொருளாதாரங்களை வாரி வழங்கி பல செல்வங்களையும் வழங்கியிருந்தான். அவர் கொண்டு வந்து நிறுத்தப்படுவார். அவருக்கு அல்லாஹ் புரிந்த அருட்கொடைகள் பற்றி அறியச் செய்வான். அவரும் அதனை அறிந்து கொள்வார். இந்த அருட் கொடைகள் மூலம் நீ என்ன செய்தாய் என்று கேட்பான். (யாஅல்லாஹ்) நீ செலவு செய்ய விரும்பிய வழியில் உனக்காக நான் செலவு செய்தேன் என்பார். (இல்லை) நீ பொய் சொல்கிறாய். நீ பெரும் வள்ளல் என்று புகழப்படவே அவ்வாறு செய்தாய். அது உனக்கு கூறப் பட்டு விட்டது என்று கூறுவான். பிறகு இவனை நரகில் முகம் குப்பர தூக்கி எறியுங்கள் என்று சொல்லப்படும் அவ்வாறே அவர் எறியப்படுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்.

    அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி) நூல் முஸ்லிம்.

    மனிதர்களின் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு ஆர்வம் கொண்டு அமல் புரிகின்றவர்கள்- காரியமாற்று கின்றவர்கள் - மறுமையில் முகம் குப்புர நரகில் வீசப்படு வதைத் தவிர வேறு கூலிகள் இல்லை. இவர்கள் மனிதர் களை திருப்தி படுத்த முனைந்தார்கள். அந்த திருப்தியை அல்லாஹ் உலகில் கொடுத்து விடுகிறான். ஆனால் மறுமையில் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கா ததனால் சுவனத்திற்கு பதிலாக நரகில் நுழைவிக்கப் படுகிறார்கள்.

    ஒருவரின் புகழ்ச்சியை முகஸ்துதியை எதிர் பார்த்து அமல் செய்வதானால் அவர் கூலி கொடுக்கக்கூடிய அதிகாரம் படைத்தவராக அல்லாஹ்வுக்கு இணையாக கூட்டாக சம அந்தஸ்த்துடையவராக இருக்க வேண்டும்.

    எனவே மக்களின் முகஸ்துதிக்காக செய்யப் படும் எந்த காரியத்திற்கும். (அமலுக்கும்) அல்லாஹ் கூலி வழங்குவ தில்லை. யாருடைய புகழ்ச்சியை நாடி அமல் செய்தீர் களோ -அல்லாஹ்வுடைய அந்தஸ்திற்கு சமமாக கருதினீர்களோ - அவரிடம் போய் கூலியை கேட்டுக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் மறுமையில் கூறி விடுவான்.

    صحيح ابن حبان - مخرجا (2ஃ 130)

    عَنْ أَبِي سَعِيدِ بْنِ أَبِي فَضَالَةَ الْأَنْصَارِيِّ، وَكَانَ مِنَص:131الصَّحَابَةِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «إِذَا جَمَعَ اللَّهُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ يَوْمَ الْقِيَامَةِ، لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ، نَادَى مُنَادٍ: مَنْ كَانَ أَشْرَكَ فِي عَمَلِهِ لِلَّهِ أَحَدًا، فَلْيَطْلُبْ ثَوَابَهُ مِنْ عِنْدِهِ، فَإِنَّ اللَّهَ أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ

    சந்தேகமே இல்லாத மறுமை நாளில் அல்லாஹ் முந்திய வர்களையும் பிந்தியவர்களையும் ஒன்று சேர்ப்பான். அப்போது அழைப்பாளர்களில் ஒருவர் தன் செயலில் (அமலில்) அல்லாஹ் வுக்கு இணையாக யாரை ஆக்கினானோ அவனிடம் அந்த செயலுக்குரிய கூலியை பெற்றுக் கொள்ளட்டும். நிச்சயமாக அல்லாஹ் இணைவைப் பாளர்களின் இணைவைத்தலை விட்டும் தேவை யற்றவன் என்று அந்த அழைப்பாளர் கூறுவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஸயீத் இப்னு பலாலா(ரலி) நூல்: இப்னு ஹிப்பான்.(அஷ்ஷைக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்)இந்த ஹதீஸ் ஹஸன் ஸஹீஹ் என்கிறார்கள்.)

    سنن ابن ماجه (2ஃ 1405)

    عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: «أَنَا أَغْنَى الشُّرَكَاءِ عَنِ الشِّرْكِ، فَمَنْ عَمِلَ لِي عَمَلًا أَشْرَكَ فِيهِ غَيْرِي، فَأَنَا مِنْهُ بَرِيءٌ، وَهُوَ لِلَّذِي أَشْرَكَ

    நான் இணைவைப்பாளர்களின் இணை வைத்தலை விட்டும் தேவையற்றவன். யார் எனக்கென்று ஒரு செயலை செய்து அதில் மற்றவரை இணையாக்குகினாரோ அவரிட மிருந்து நான் நீங்கிவிட்டேன்.(அந்த செயல் எனக்குரிய தல்ல எனக்கு) இணையாக ஆக்கியவருக்கே உரியதாகும். (அவரிடம் கூலியை பெற்றுக் கொள்ளட்டும்) என்று அல்லாஹ் கூறினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார் கள்.

    அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி) நூல்: இப்னு மாஜர (அஷ்ஷைக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்)இந்த ஹதீஸ் ஸஹீஹ் என்கிறார்கள்.)

    سنن ابن ماجه (2ஃ 1406)

    عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَتَذَاكَرُ الْمَسِيحَ الدَّجَّالَ، فَقَالَ: «أَلَا أُخْبِرُكُمْ بِمَا هُوَ أَخْوَفُ عَلَيْكُمْ عِنْدِي مِنَ الْمَسِيحِ الدَّجَّالِ؟» قَالَ: قُلْنَا: بَلَى، فَقَالَ: «الشِّرْكُ الْخَفِيُّ، أَنْ يَقُومَ الرَّجُلُ يُصَلِّي، فَيُزَيِّنُ صَلَاتَهُ، لِمَا يَرَى مِنْ نَظَرِ رَجُلٍ»

    நாங்கள் தஜ்ஜாலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். தஜ்ஜாலை விட (அவனது தீங்கை விட) நான் உங்கள் விஷயத்தில் பயப்படும் விடயத்தை உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று கேட்டார்கள். நாங்கள் ஆம் அறிவியுங்கள் என்றோம். மறைமுகமான இணைவைப்பை பற்றித்தான் பயப்படுகிறேன். ஒரு மனிதர் தொழுகிறார். அவரது தொழுகை யை அழகுற நிறைவேற்றுகிறார். (அதனை) மனிதர்கள் பார்த்து புகழ வேண்டும் என்பதற்காக செய்கிறார். (இந்த செயலைப் பற்றித் தான் பயப்படுகிறேன்) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி) நூல்: இப்னு மாஜர். (அஷ்ஷைக் நாஸிருத்தீன் அல்பானி (ரஹ்)இந்த ஹதீஸ் ஹஸன் என்கிறார்கள்.)

    மனிதர்களின் புகழுக்காக செயற்படும் காரியத்தை குறித்து நபி(ஸல்) அவர்கள் மிகவும் பயந்தார்கள். எனது உம்மத் இத்தகை காரியங்கள் செய்யக்கூடாது நரகில் நுழைந்து விடக் கூடாது என்று எச்சரிக்கை செய்தார்கள்.

    குறுகிய கால வாழ்க்கையில் நாம் செய்யும் வணக்கம் உட்பட அனைத்து நற்காரியங்களும் பல சிரமங்களை தாங்கி செய்கிறோம். அவை பாதுகாக்கப்படுவதற்கு ஒரே வழி அல்லாஹ்வுக் காக என்ற நீயத்துடன் இஹ்லாஸூடன் செய்வது மட்டும் தான்.

    அல்லாஹ் கூறுகிறான்.

    وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

    இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான். அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடைய வனாக இருக்கின்றான். (2:207)

    {وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنْفُسِكُمْ وَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ }

    (நபியே!) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால் தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான். இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்.அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள். நல்ல வற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தா லும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும். நீங்கள் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.( 2:272)

    وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى

    إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى وَلَسَوْفَ يَرْضَى

    ஆனால் பயபக்தியுடையவர் தாம் அ(ந்நரகத்)திலிருந்து தூரமாக்கப் படுவார். (அவர் எத்தகையோரென்றால்) தம்மை தூய்மைப் படுத்தியவராகத் தம் பொருளை (இறைவன் பாதையில்) கொடுக்கிறார். மேலும், தாம் பதில் (ஈடு) செய்யுமாறு பிறருடைய உபகாரமும் தம் மீது இல்லாதிருந்தும், மகா மேலான தம் இறைவனின் திருப் பொருத்தத்தை நாடியே (அவர் தானம் கொடுக்கிறார்). வெகு விரைவிலேயே (அத்தகையவர் அல்லாஹ்வின் அருள் கொடையால்) திருப்தி பெறுவார். (92:17-21)

    {لَا خَيْرَ فِي كَثِيرٍ مِنْ نَجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

    (நபியே!) தர்மத்தையும், நன்மையான வற்றையும், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைப்பதையும் தவிர, அவர்களின் இரகசியப் பேச்சில் பெரும்பாலான வற்றில் எந்த விதமான நலமும் இல்லை. ஆகவே எவர் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி இதைச் செய்கின் றாரோ, அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்கு வோம். (4:114)

    அல்லாஹ்வுக்காகவும் அவனது திருப்திக்காவும் செய்யும் நன்மைகளுக்கு அவன் கணக்கின்றி கூலி கொடுக்கிறான்.

    சிறிய இணைவைப்பை தவிர்ந்து கொள்ள வேண்டு மானால் இஹ்லாஸை கைகொள்வதே சிறந்த வழியாகும். அதற்கான சிறப்பையே அல்லாஹ் இங்கே தெளிவாக கூறுகிறான்.